Published Date: February 18, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 33 இருசக்கர வாகனங்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் தனித்த அக்கறை செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ரூபாய் 38 லட்சம் மதிப்பில் மாற்று திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று வழங்கினார்.
இதன்படி முதலில் ஆரப்பாளையம் பகுதிகுட்பட்ட 21, 22, 57, 58 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 8 நபர்களுக்கு, மேல பொன்னகரம் இரண்டாவது தெரு திராவிடன் படிப்பாகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பின்னர் எல்லிஸ் நகர் பகுதிக்கு உட்பட்ட 60, 61, 75 வார்டுகளில் 6 நபர்களுக்கும், இதை அடுத்து சிம்மக்கல் பகுதிக்கு உட்பட்ட 50, 51, 56 வார்டுகளில் 8 நபர்களுக்கும், மேலமாசி வீதி பகுதிக்கு உட்பட்ட 52, 76, 77 வார்டுகளில் மாற்றுத்திறனாளிகள் 11 நபர்கள் என 33 இருசக்கர வாகனங்களை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி பால், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி, பகுதி செயலாளர் எஸ்.எஸ்.மாறன், பி.கே செந்தில், சரவணன் பாண்டியன், சு.பா.கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் மகாலட்சுமி பாமாமுருகன், செல்வி செந்தில் பாண்டி, செல்வி மகாலட்சுமி, அழகு சுந்தரம், இந்திரா காந்தி, விஜயலட்சுமி, விஜயாகுரு, ஜென்னியம்மாள், பாஸ்கரன் கார்த்திக், ராஜ்பிரதாபன் உள்ளிட்ட அதிகாரிகள் தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
முன்னதாக மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திடீர் நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திடீராய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையம் முன்புறம் உள்ள பழைய கட்டிடங்களை அவற்றும் பணி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்தார். ஆய்வின் போது மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், நகர்நல அலுவலர் இந்திரா, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், பொன்னையா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
Media: Dinakaran